Coventry Tamil Welfare Association

கொவன்றி தமிழர் நலன்புரிச் சங்கம்
Coventry Tamil Welfare Association

Hon Lady Godiva

Coventry, situated in the Midlands, is one of the ancient cities in England. World famous playwright William Shakespeare was born in Stratford, which is approximately thirty miles Southwest of Coventry. It is an industrial city and home for several inventions and productions. The very popular Jaguar car company is based here. Frank Whittle, who invented the Jet Engine, was born here too.

This city is world famous for our Lady Godiva's life story, which happened back in the thirteenth century and bringing meaning to the history and great heritage of the City, we still celebrate it every year in the streets of Coventry. The Godiva sprit, a timeless message of caring, unity and empowerment, stimulation and a smile for those in need of friendship - symbolises the humanity of mankind.

BHARATHANATYAM AND THE WORLDWIDE WEB

It was a magical world that I stepped into. One that was filled with musicality, serenity and divinity. As I threaded down the path of my Arangetram, little did I realise that at the end of it, the world of dance would have become part of me.
Since I could remember, I had always imagined myself performing my Arangetram whenever I attended one. Finally, with God�s grace I had the privilege to do so with Apsara teacher. She is one who personifies love and dedication to dance. When I try to make a list of things that I learnt from her, that list becomes endless. All I can tell you is that today I not only look at dance, but music, art, and culture with new eyes. It was she who opened that door into this magical world.-> -> -> M O R E

விளையாட்டு விழா - 2022

கொவன்றி தமிழர் நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த விளையாட்டு விழா - 2022, ஜூலை 09ம் தினம் எதிர்பாராத அளவிற்கு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. எல்லோரும் ஒன்று சேர்ந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தது. நிகழ்வுக்கு பிரதம விருந்தினர்களாக Mrs Aysha Masai, Councillor & Deputy Chairman of Diverse Community, Mr Dial Masai, Founder of IACF and Vice president of Coventry Mercia Lions Club அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக கொவன்றி தமிழர் நலன்புரிச் சங்கத்தின் ஆரம்ப உறுப்பினர்கள் திரு திருமதி சண்முகலிங்கம் இணையரும் வருகை தந்திருந்தார்கள். விழாவிற்கு சகல வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கிய எமது பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். குறிப்பாக இணை(நிதி) அனுசரணை வழங்கியவர்களுக்கும், சிற்றுண்டி வகைகளையும் உணவு வகைகளையும் தந்துதவிய பெற்றோர்களுக்கும், மதிய உணவினைத் தயார் செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய ஆசிரியர்களுக்கும், அதனைத் தயார் செய்து விற்பனை செய்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எமது விளையாட்டு விழாவை எந்தவித இடையூறுகளுமின்றி மிக மிக நேர்த்தியான முறையில் நடாத்தி முடித்த நடுவர்களுக்கும், உடனுக்குடன் சான்றிதழ்களை எழுதிய ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், மைதான ஒழுங்கமைப்பில் முதல் நாளும், நேற்றைய தினமும் கைகோர்த்த பெற்றோர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். மேலும் விழாவில் கலந்து சிறப்பித்த அயல் தமிழ்ப் பாடசாலை பொறுப்பாசிரியர்களுக்கும், சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும், இலவச புகைப்பட உதவி மற்றும் ஒலியமைப்பில் உதவிய ஆசிரியர்களுக்கும் , இன்னும் எவரையாவது தவற விட்டிருந்தால் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். போட்டிகளில் வெற்றியீட்டிய மற்றும் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தமிழ்ப் பாடசாலை கோடைக்கால விடுமுறைக்காக மூடப்பட்டு, மீண்டும் செப்டம்பர் மாதம் 3ம் திகதி ஆரம்பமாகும் என்பதையும், 16/07/2022 நடைபெறவிருந்த கொவன்றி தமிழர் நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் செப்டம்பர் மாதம் 10ம் திகதி காலை 10 மணிக்கு பிற்போடப்பட்டுள்ளது என்பதையும் அறியத்தருகின்றோம். உங்கள் விடுமுறையை மகிழ்ச்சியாக களியுங்கள்!

தமிழ் மொழியில் தேர்வு

பிரித்தானிய அரசின் கொள்கையின் படி 2014 ல் இருந்து அன்னிய மொழிகள் மதிப்பீட்டு திட்டத்தில் இருந்த 25 மொழிகளில், தேர்வு தவிர்க்கப்பட்ட மொழியாக தமிழ் மொழியும் பாதிக்கப்பட்டுள்ளது

தமிழ் மொழிக்கு OCR (Oxford, Cambridge, RSA) தேர்வு இல்லாத நிலையில், அதற்கு இணையான தேர்வு வாரியமாக பிரித்தானிய தமிழ் மொழிப் பரீட்சைச் சபை அமைக்கப்பட்டுள்ளது. இது புலம்பெயர் வாழ் தமிழ் சிறார்களின் தமிழ்க் கல்வி ஆர்வத்தை தொடர்ந்து வளர்பதற்காக, அவர்களின் நலன் கருதி உருவாக்கப்பட்ட தேர்வு வாரியம்.

OCR மற்றும் EDEXCEL பரீட்சைச் சபையில் பிரதம பரீட்சை அதிகாரியாக கடமையாற்றுபவரின் தலைமையில், அனுபவம் மிக்கவர்களின் பங்களிப்புடன் புலம்பெயர் நாடுகளில் கேட்டல், வாசித்தல், பேசுதல், எழுதுதல் ஆகிய நான்கு திறன்களிலும், பாலர் முதல் 8 ம் வகுப்பு வரை 25ம் திகதி ஆனி (ஜூன்) மாதம் 2020 (25-06-2022) தமிழ் பரீட்சைகள் நடை பெறும்.

விண்ணப்ப முடிவு - 30 சித்திரை 2022

தொடர்பு;

Mrs Sasireka MALARAVAN - 07780 957583
Email: info@bteb.org.uk
Web: www.bteb.org.uk

இணையத்தில் தமிழ் மொழிக் கல்வி

தமிழ்நாடு பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் சுவாமிநாதன் அவர்கள். அண்மையில் கொவென்றியில், தமிழ் இணையவலைக் கல்வி முறை பற்றி விரிவுரை ஆற்றினார். தமிழில் பகுதி நேர டிப்ப்லோமா, பிஏ கற்றுத் தேற விரும்புவோர் நிர்வாக உத்தியோகத்திரிடம் உங்கள் விபரங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

These photos are as part of the Inauguration function...

mag (31K)

2022 புது வருட தமிழ் வகுப்புக்கள்

அனைத்து கொவென்றி வாழ் தமிழ் மக்களுக்கும் எமது இனிய புத்தாண்டு வணக்கங்கள். நமது தமிழ் பாடசாலை இப்புது வருடத்தில், புதுப்பொலிவோடு புது இடத்தில் ஆரம்பமாக உள்ளது என்னும் நற்செய்தியை மிக மனமகிழ்வுடன் அறியத்தருகின்றோம் . முன் அறிவித்தபடி 08.01.2022 அன்று முதல் தமிழ் மொழிக் கலைக் கழகத்தில் நேரடியாக பாடங்கள் நடாத்தப்பட ஒழுங்குகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. 08.01.2022 பாடசாலையை ஆரம்பித்து வைக்க கொவன்றி நகர முதல்வரும் அவரது பாரியாரும் வருகை தருவதாக உறுதி அளித்துள்ளார்கள். அன்று பிரித்தானிய தமிழ் பரீட்சைச் சபையின் சான்றிதழ்களும், OFAAL சான்றிதழ்களும் பிள்ளைகளுக்கு கொவன்றி நகர முதல்வரால் வழங்கப்படும். பாடசாலையின் முகவரி: Clifford House, 38-44, Binley Road, Coventry CV3 1JA. நன்றி, கந்தையா அரியரத்தினம்(07823535094), கொவன்றி தமிழர் நலன் புரிச் சங்கம் 🙏> > > MORE


தமிழ் இணைய மாநாடு, உலகத்தமிழர் தகவல் தொழில் நுட்ப மன்றம் INFITT ராஜா அண்ணா மலைச் செட்டியார், அண்மலைப் பல்கலைக்கழகத்தில், 29-31 வரை நடத்திய தமிழ் இணைய மாநாட்டில், திரு சிவா பிள்ளை பங்கு பற்றி உரை ஆற்றியனார். Photos

ஓர் இதயத்திலேSt Antony's College Alumni Association of Europe (SACKAAEU) - Registered charity in England & Wales in the UK, proudly sponsors the film "Orr Ithayaththilae" for viewing it on line. Please watch the film as it is produced, directed and acted by Antonians and by doing so you are helping the underprivileged children who are studying at St Antony's College, Kayts, Sri Lanka. The film "Orr Ithayaththilae" is available for viewing via the - watch movie link

Inauguration of the Bharathiyar University Europe Study Centre

The inaugural meeting to host the distance learning of Applied Tamil was held at Barr's Hill School and Community College, Coventry CV1 4BU on the 12th September 2011. Vice Chancellor of Bharathiar University Dr C Swaminathan (Chief Guest of the evening) addressed the gathering of the Tamil community which was jointly organized by the Coventry Tamil Academy of Language and Arts and the Western Tamil Schools Federation. Mr Kandiah Ariyaratnam, Chairman of the Coventry Tamil Welfare Association presided the meeting and welcomed the delegates from Bharathiar University.

C o v e n t r y   T a m i l   W e l f a r e   A s s o c i a t i o n
EMail: coventrytamils2002@gmail.com

Registered as a Charity in England and Wales
Registered Charity Number: 1093924

Reproduction from CTWA website is allowed when used without any alterations to the contents and the source, CTWA, is mentioned.