Coventry Tamil Welfare Association

கொவன்றி தமிழர் நலன் புரி சங்கம்
Coventry Tamil Welfare Association

Hon Lady Godiva

Coventry, situated in the Midlands, is one of the ancient cities in England. World famous playwright William Shakespeare was born in Stratford, which is approximately thirty miles Southwest of Coventry. It is an industrial city and home for several inventions and productions. The very popular Jaguar car company is based here. Frank Whittle, who invented the Jet Engine, was born here too.

This city is world famous for our Lady Godiva's life story, which happened back in the thirteenth century and bringing meaning to the history and great heritage of the City, we still celebrate it every year in the streets of Coventry. The Godiva sprit, a timeless message of caring, unity and empowerment, stimulation and a smile for those in need of friendship - symbolises the humanity of mankind.

BHARATHANATYAM AND THE WORLDWIDE WEB

It was a magical world that I stepped into. One that was filled with musicality, serenity and divinity. As I threaded down the path of my Arangetram, little did I realise that at the end of it, the world of dance would have become part of me.
Since I could remember, I had always imagined myself performing my Arangetram whenever I attended one. Finally, with Gods grace I had the privilege to do so with Apsara teacher. She is one who personifies love and dedication to dance. When I try to make a list of things that I learnt from her, that list becomes endless. All I can tell you is that today I not only look at dance, but music, art, and culture with new eyes. It was she who opened that door into this magical world.-> -> -> M O R E

திரு கந்தையா விஜயரட்ணம்

(பிரபல வர்த்தகர்- சத்யா ஸ்டோர்ஸ் கொழும்பு, சத்யா பேக்கறி யாழ்ப்பாணம்)

ammah0_s (11K)

பிறப்பு : 14 மே 1940 இறப்பு : 20 செப்ரெம்பர் 2014

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா விஜயரட்ணம் அவர்கள் 20-09-2014 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நீலாம்பிகை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற முத்துராசா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

முத்துமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீதரன்(பிரித்தானியா), ஸ்ரீகரன்(பிரித்தானியா), ஜெயசித்ரா(பிரித்தானியா), வசிகரன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற இந்திராணி, ஜெகநாதன்(அவுஸ்திரேலியா), சந்திரகாந்தா(இலங்கை), அரியரட்ணம்(பிரித்தானியா), காலஞ்சென்ற ஈஸ்வரநாதன், கோபிநாதன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற சிவகடாச்சம், பத்மாவதி, இராஜேந்திரா, மரியன், கெளஷலாதேவி, குணதிலகம்(பிரித்தானியா), நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவமயூரன், அபிராமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வித்தியன், ஆதித்தியன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2014 வியாழக்கிழமை அன்று கொழும்பில் நடைபெறும். மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தொடர்புகளுக்கு
முத்துமலர்(மனைவி) — இலங்கை
தொலைபேசி: +94112552732

ஸ்ரீதரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447538670184

ஸ்ரீகரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447538670184

ஜெயசித்ரா சிவமயூரன்(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +447940351769
செல்லிடப்பேசி: +447961277728

வசிகரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447985768183

கந்தையா அரியரத்தினம் - +44 7823 535 094

திரு சுந்தரமூர்த்தி ஸ்ரீஸ்கந்தபாலன்

(இளைப்பாறிய பொறியியலாளர்)
மண்ணில் : 20 மே 1939 - விண்ணில் : 10 யூலை 2014

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து கொவன்றியினை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரமூத்தி ஸ்ரீஸ்கந்தபாலன் அவர்கள் 10-07-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி இராசம்மா தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ் சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

நிரோசன், நிருக்சன், நிதர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புஸ்பராணி, காலஞ் சென்றவர்களான புஸ்பமணி, சிறினிவாசன், மற்றும் புஸ்பமனோகரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வள்ளி அவர்களின் அன்பு மாமனாரும்,

கணேசையா (வைத்திய கலாநிதி - லண்டன்), சண்முகநாதன் (அவுஸ்திரேலியா), கந்தசாமி (வைத்திய கலாநிதி - லண்டன்), சத்தியமூர்த்தி (வைத்திய கலாநிதி-இலங்கை), ஈஸ்வரமூர்த்தி (பிரேசில்), சக்திமலர் (இலங்கை), காலஞ் சென்ற கருணாமூர்த்தி, யோகமூர்த்தி (கனடா), குமாரமூர்த்தி (ஜெர்மனி), ஸ்கந்தமூர்த்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜஸ்மின், அமெலியா, சரிசா, அமாஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு சின்னத்தம்பி நடராசா

(கொழும்புத் துறைமுகக் கூட்டுத்தாபன முன்னாள் ஊழியர்)

பிறப்பு : 4 பெப்ரவரி 1930 — இறப்பு : 29 செப்ரெம்பர் 2013

நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இலங்கை ஓட்டங்குளம், கொழும்பு, கனடா ரொரன்ரோ, இங்கிலாந்து கொவன்றி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதர் சின்னத்தம்பி நடராசா அவர்கள் 29-09-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கிலாந்தில் காலமானார்.
அன்னார், விஸ்வநாதர், இராமநாதர்(பொக்கட்டி) அவர்களின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி(நீளியார்) வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை தையல்முத்து தம்பதிகளின் மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுசீந்திரன், கலைச்செல்வி, சுசீஸ்வரன், சோதீஸ்வரன், கலையரசி, இராஜசுசீந்திரன், சுசீஆனந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சேதுப்பிள்ளை, காலஞ்சென்ற கதிரவேலு(பொலிஸ்), காலஞ்சென்ற குமாரசாமி, மனோன்மணி(ஓய்வுபெற்ற தாதி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
இன்பராணி, சச்சிதானந்தம், தயாரஞ்சினி, நவரஞ்சினி, துறைவன், சுதர்சினி, தாருணி ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்ற சண்முகம், நடராசா(சின்னத்தம்பி), விஜயரத்தினம்(நல்லையா), பத்மநாதன்(பழனி), விமலா, ரவீந்திரன், கலா, ஜெகதீஸ்வரன்(குழந்தை), ஈஸ்வரன் ஆகியோரின் தாய் மாமனாரும்,
காலஞ்சென்ற தம்பையா, காலஞ்சென்ற ஏரம்பு, கண்மணி, காலஞ்சென்ற கண்மணி, காலஞ்சென்ற பங்கராசா, காலஞ்சென்ற இரத்தினசிங்கம், காலஞ்சென்ற மணியம், கனகேஸ்வரி(சின்னக்கிளி) ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற கனகம்மா இரத்தினசிங்கம், கணபதிப்பிள்ளை பரராஜசிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
இந்திரா, பூபதிராசா, காலஞ்சென்ற சந்திரா, தவராசா, ராணி, காலஞ்சென்றவர்களான சித்திரா, திருக்குமார், மற்றும் வனிதா, பாமா, பரமேஸ்வரி, நாகலிங்கம் ஆகியோரின் அன்புக் குஞ்சியய்யாவும்,
டினோ, அன்புருவன், வேனில், செவ்வந்தி, கார்த்திகா, மானசி, மாசிலன், சுபீட்சன், முகூர்த்தா, ரட்சிகா, நேத்திரன், கோபிகா, பிறிநிதா, அபிஷா, அபூர்வன், மிதுலா, நிலா, அமிர்தா ஆகியோரின் செல்லப் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
195, Belgrave Road, Coventry, CV2 5BL

தகவல்
குடும்பத்தினர்

பார்வைக்கு வைக்கப்படும் இடம்: The Co-Operative, Asian Funeral Service, 346-354 Foleshill Road, Coventry CV6 5AJ
நேரம்: வியாழக்கிழமை 10/10/2013, 08:30 மு.ப — 12:00 பி.ப

தகனம் செய்யப்படும் இடம்: Canley Crematorium & Garden Cemetery, Cannon Hill Road, Coventry CV4 7DF CV4 7DF
நேரம்: வியாழக்கிழமை 10/10/2013 — 12:45 பி.ப

Tamil film director Sridhar passes away

Veteran Tamil film director C V Sridhar, who introduced actors like AIADMK chief Jayalalithaa and tasted success in Hindi cinema has passed away on Monday 20th October 2008 in Chennai.

After making his directorial debut with Gemini Ganesan starrer "Kalyana Parisu," a critically acclaimed box-office grosser, in the early 60s, Sridhar went on to make movies that are etched in the memories of many an avid Tamil cinema fan.

The man credited with 'the Midas touch', Sridhar did not confine himself to melodramatic subjects like 'Kalyana Parisu' and 'Nenjil Ore Aalayam', remade in Hindi as 'Dil Ek Mandir', but also ventured into the then unbeaten tracks of light-hearted romantic movies, with his "Kaathalikka Neramillai," topping the list of evergreen Tamil movies and "Ooty varai uravu."

His "Then Nilavu" (Honeymoon), starring Gemini Ganesan and Vyjayanthi Mala Bali and the first Tamil film to be shot in Jammu and Kashmir, "Kadhalikka Neramillai," a cult classic, and others like "Ooty Varai Uravu," starring Tamil icon late Sivaji Ganesan, in the lead are rated as some of the best movies in Indian cinema.

His "Nenjam Marapadillai" was again an offbeat effort, with the script focussing on a romance story of two lead characters different by their wealth status, with the plot woven in the background of "previous birth".

Known for his penchant for new faces, Sridhar has introduced various top yesteryear actors such as Jayalalithaa, airhostess-turned-actor Kanchana, actor Ravichandran and noted comedian "Vennira Adai" Murthy among others, who went on to carve their own places in the Tamil film world.

Mr Sridhar was ill and confined to wheel-chair, is survived by wife Devasena, a son Sanjay and a daughter Sripriya.

Coventry Tamil Welfare Association had the opportunity of having his blessings and Mr Sridhar will be remembered for the advise and support given for the growth of this organisation.

He will be missed by many and may his soul rest in peace.இயக்குனர் ஸ்ரீதர் மறைந்தார்

தமிழ் சினிமாவின் எல்லைகளை விரிவடையச் செய்த படைப்பாளிளுள் மிக முக்கியமானவராகக் கருதப்படும் இயக்குநர் ஸ்ரீதர் இன்று காலை மரணமடைந்தார்.

சில வருடங்களுக்கு முன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட ஸ்ரீதர், திரைப்படப் பணிகளிலிருந்து முழுவதுமாக ஒதுங்கியிருந்தார். கடும் உடல்நலக் குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன் அவரை அடையாறு மலர் மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.

ரத்தப்பாசம் (சிவாஜி நடித்தது அல்ல... இது ஸ்ரீதர் எழுதிய நாடகம், பின்னாளில் திரைப்படமானது) என்ற படத்தின் மூலம் வசனகர்த்தாவாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய ஸ்ரீதர், பழைய கலாச்சாரத்தில் ஊறிப்போயிருந்த தமிழ் சினிமாவுக்கு அறுபதுகளில் புது ரத்தம் பாய்ச்சியவர்.

அவரது இயக்கத்தில் உருவான கல்யாணப் பரிசையும், நெஞ்சில் ஓர் ஆலயத்தையும் இன்றும் திரையுலகம் கொண்டாடுகிறது. 50 ஆண்டுகளுக்கு முந்தைய படங்கள்தான் என்றாலும் அவற்றின் திரைக்கதையில் தெரியும் புத்துணர்ச்சியை வேறு படங்களில் பார்ப்பது அரிது.

ஸ்ரீதரின் படங்களில் கண்ணியமும் கதை நயமும் நிறைந்திருக்கும்.

நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படம் தமிழில் விலை போகுமா என்ற சந்தேகத்தோடு சிலர் பார்த்தபோது, அதன் தமிழ் வடிவம் மட்டுமல்ல, தில் ஏக் மந்திர் என்ற பெயரில் அதன் இந்தி வடிவத்தையும் சூப்பர் ஹிட் ஆக்கி சாதனைப் படைத்தவர் ஸ்ரீதர்.

1961ல் தனது சொந்தப் பட நிறுவனம் சித்ராலயாவைத் தொடங்கிய ஸ்ரீதர் 30 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுதினார். அவரால் சூப்பர் ஸ்டார்களையும் இயக்க முடிந்தது, புதுமுகங்களையும் எளிதாக நடிக்க வைக்க முடிந்தது.

இன்று முன்னணி நடிகராகத் திகழும் விக்ரம் தனது வாழ்க்கையைத் துவங்கியது ஸ்ரீதரின் தந்துவிட்டேன் என்னை படம் மூலம்தான்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களாக ரஜினியும் கமலும் உருவெடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், அவ்விருவரையும் வைத்து ஸ்ரீதர் உருவாக்கிய இளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படம் தமிழ் சினிமாவின் மைல்கல்லாக அமைந்தது.

கமர்ஷியல், கிளாஸிக் என தொட்டது அனைத்திலும் வெற்றி பெற்ற உன்னதக் கலைஞர் ஸ்ரீதர்.

மக்கள் திலகம் எம்ஜிஆரை வைத்து அவர் இயக்கிய உரிமைக்குரல், மீனவ நண்பன் இரண்டுமே வசூலில் சிகரம் தொட்டவை.

அதே போல நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோரின் திரைப் பயணத்தில் மறக்க முடியாத பல மைல் கற்களைப் படமாகத் தந்தவர் ஸ்ரீதர். சிவாஜி கணேசனின் சிவந்த மண் திரைப்படத்தை தமிழ் திரையுலகம் மறக்க முடியுமா?

திரையுலகிலிருந்து அவர் முழுமையாக விலகினாலும் அவர் மனம் கடைசி மூச்சு நிற்கும்வரை சினிமாவையே சுவாசித்துக் கொண்டிருந்தது. தனது 70வது வயதிலும் கூட சினிமாவுக்காக திரைக்கதையை உருவாக்கிக் கொண்டிருந்தவர் ஸ்ரீதர். இன்றைய முன்னணி இயக்குநர்கள் பி.வாசு, இயக்குநராக இருந்து நடிகராகிவிட்ட சந்தானபாரதி, சிவி ராஜேந்திரன் என பல இயக்குநர்களை உருவாக்கியவர்.

தமிழ்ல் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் வெற்றிக் கொடி கட்டியவர் ஸ்ரீதர்.

கலையுலகம் கண்ணீர்:!

இயக்குநர்களின் இயக்குநரான ஸ்ரீதரின் மறைவுக்கு தமிழ் திரையுலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்துவதாக இயக்குநரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான ராம நாராயணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

C o v e n t r y   T a m i l   W e l f a r e   A s s o c i a t i o n
EMail: coventrytamils2002@gmail.com

Registered as a Charity in England and Wales
Registered Charity Number: 1093924

Reproduction from CTWA website is allowed when used without any alterations to the contents and the source, CTWA, is mentioned.